Friday, November 22, 2013

Dr. ஜாகிர் நாயக்



















மகராஷ்டிரா மாநிலம் மும்பையை  சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்  அவர்கள் தலைசிறந்த இஸ்லாமிய  பிரசாரகர் ஆவர் ஆவார்.

1965 அக்டோபர் மாதம் பிறந்த டாக்டர் அவர்கள் Islamic Research Foundation (IRF) என்ற அமைப்பை துவக்கி,  அதன் மூலம் இஸ்லாமிய பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் புத்தகங்கள் வெளியிட்டு மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து வருகிறார்.

பிற மத நண்பர்கள் இஸ்லாத்தைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு இறைவனின் கிருபையால் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் புன்னகையுடன் அவர் அளிக்கும் பதில்கள் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள செய்திருக்கிறது.

அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளிலும் ஆங்கிலம், உருது மொழிகளில் டாக்டர் அவர்கள் ஆற்றிய உரைகளால் லச்சகனக்கான மக்கள் தூய இஸ்லாத்தை அறிய துணை புரிந்துள்ளன (அல்ஹம்துலில்லாஹ்).

ஒரு சிலரின் நடவடிக்கைகளால் விவாதங்கள் என்றாலே கேலிக்கூத்தாகி விட்ட இக்கால கட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறான என்னங்கோண்டோரை அழைத்து அவர்களுடன் அழகிய முறையில் விவாதங்கள் நடத்தி அல்லாஹ்வின் பெருங் கருணையால் அவர்களை நல்லெண்ணம் கொள்ளச் செய்த பெருமை   டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களைச் சாரும்.

No comments:

Post a Comment