Monday, August 10, 2020

அந்த நூறு மனிதர்கள் (The 100)

திரு. மைக்கேல் ஹெச். ஹார்ட் எழுதிய ''புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை 100''  புத்தகம் தமிழில்...


எனக்கு பிடித்த புத்தகங்கள்

 

1. அல் குரான் 

2. அல் ரஹீக் அல் மக்தூம் - நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு 

3. அல்  பாரூக் - உமர்(ரலி) வரலாறு - அல்லாமா ஷிப்லி (ரஹ்)

4. வரலாற்றின் வெளிச்சத்தில் ஓரங்கஜேப் 

5. அக்னி சிறகுகள் 

6. புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை 100 - மைக்கேல் ஹெச். ஹார்ட் 

7. முகலாயர்கள் - முகில் 

8. வந்தார்கள் வென்றார்கள் 

9. கற்றதும் பெற்றதும் 

10. திருக்குறள் 

Monday, June 17, 2019

மாமனிதர்

மாமனிதர்

1400 வருடங்களுக்கு முன் சிறு சிறு குழுக்களாகவும், கோத்திரங்களாகவும் பிரிந்து கிடந்த, ஆடுகளையும் ஒட்டகங்களையும் மெய்த்துகொன்டிருந்த, கல்வியறிவும் , அரசியல் அறிவும் சிறிதளவும்  இல்லாத அரேபியர்களை இறைவேதமான அல் குரான் மூலமும் , ஒழுக்கமான வாழ்க்கை, உன்னத கொள்கைகள் மூலம் காட்டரபிகலான பாலைவன மக்களை உலகத்திற்கே உன்னத மக்களாய் உறவாக்கி காட்டிய உத்தம மனிதர், இதுவரை தோன்றிய இறைதூதர்களுக்கெல்லாம் தலைமை இறைதூதர், இருண்டு கிடந்த பாலைவனத்தில் தன் இறைவன் துணைகொண்டு அறிவு விளக்கேற்றியவர் அதன் வெளிச்சம் பாலைவனத்தையும் தாண்டி , ஐரோப்பா கண்டத்தையும் தாண்டி உலகம் முழுதும் தன் சுடர் வீசி  பிரகாசிக்கிறது , இது உலகம் உள்ளளவும் தொடர்ந்து கொண்டே இருக்கும், இத்தகைய உன்னத மார்க்கம்தான் இஸ்லாம், இதை இறைவன் உதவியுடன் மீண்டும் உலகில் நிறுவியவர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.  இங்கு நான் நபி(ஸல்) அவர்களைப்பற்றி சொல்வதை விட  அறிஞர்களின், மேதைகளின் கருத்துக்களை உங்களுக்கு ஒரு பதிவாக தருகிறேன் .... 


தாமஸ் கார்லைல்.

Monday, December 2, 2013

உலகின் மிகப்பெரிய பள்ளிவாசல்கள்


1. மஸ்ஜித் ஹரம் (மக்காஹ் - சவுதி அரேபியா)


Friday, November 22, 2013

Dr. ஜாகிர் நாயக்



















மகராஷ்டிரா மாநிலம் மும்பையை  சேர்ந்த டாக்டர் ஜாகிர் நாயக்  அவர்கள் தலைசிறந்த இஸ்லாமிய  பிரசாரகர் ஆவர் ஆவார்.

1965 அக்டோபர் மாதம் பிறந்த டாக்டர் அவர்கள் Islamic Research Foundation (IRF) என்ற அமைப்பை துவக்கி,  அதன் மூலம் இஸ்லாமிய பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் புத்தகங்கள் வெளியிட்டு மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து வருகிறார்.

பிற மத நண்பர்கள் இஸ்லாத்தைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு இறைவனின் கிருபையால் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் புன்னகையுடன் அவர் அளிக்கும் பதில்கள் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள செய்திருக்கிறது.

அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளிலும் ஆங்கிலம், உருது மொழிகளில் டாக்டர் அவர்கள் ஆற்றிய உரைகளால் லச்சகனக்கான மக்கள் தூய இஸ்லாத்தை அறிய துணை புரிந்துள்ளன (அல்ஹம்துலில்லாஹ்).

ஒரு சிலரின் நடவடிக்கைகளால் விவாதங்கள் என்றாலே கேலிக்கூத்தாகி விட்ட இக்கால கட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறான என்னங்கோண்டோரை அழைத்து அவர்களுடன் அழகிய முறையில் விவாதங்கள் நடத்தி அல்லாஹ்வின் பெருங் கருணையால் அவர்களை நல்லெண்ணம் கொள்ளச் செய்த பெருமை   டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களைச் சாரும்.